முக்கிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மலேசியா பிரதமர் மகாதீர் கண்டனம்….

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது.

இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 6 பேர் பலியாகினர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசியா பிரதமர் மகாதீர் முகமது,

“மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

அதேபோன்றதொரு நடவடிக்கையை மலேசியாவில் மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும்.

குழப்பம் ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுவர். மலேசியாவுக்கு வந்த இந்தியர்களை நாம் ஏற்றுக் கொண்டோம்.

அதேபோல் சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.