‘காண்டம்’ விளம்பரங்களை காலை 6 மணி முதல் இரவு 10மணி வரை ஒளிபரப்ப தடை..


மத்திய அரசு ஆணுறை விளம்பரங்களை அனைத்து நேரங்களிலும் டிவி சேனல்களில் ஒளிபரப்பக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.

வீட்டில் குடும்பத்துடன் அமா்ந்து தொலைக்காட்சிகளை பாா்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென குறைவான ஆடையுடன் வரக்கூடிய ஆண், பெண்ணின் நடவடிக்கையால் வீட்டில் உள்ள அனைவரும் சிறிது நேரம் திகைக்க நேரிடும். இறுதியில் அது ஆணுறை விளம்பரமாக அமையும். இது போன்ற காட்சிகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், மிகவும் சௌகாியமற்ற சூழல் ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினா் குற்றம் சாட்டி வந்தனா்.

இந்த நிலையில், மத்திய அரசு புதிய நெறிமுறையை பிறப்பித்துள்ளது. தொலைக்காட்சிகளில் இனிமேல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஆணுறை விளம்பரத்தை காட்ட முடியுமே தவிர எல்லா நேரங்களிலும் இது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்ப முடியாது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஆணுறை விளம்பரத்தை காண்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியமற்ற பழக்கங்களை அவா்கள் பின்பற்றுவதை தடுத்தல் ஆகிய விதிமுறைகளின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்தய அரசு தொிவித்துள்ளது.