கனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதி தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு…


கனடாவின் டோரன்டோ நகரில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து கனடா போலீஸ் அதிகாரிகள் தரப்பில், “டோரன்டோவில் யோங்கி சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த பாதாசாரிகள் மீது வேகமாக வந்த வேன் ஒன்று மோதியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். பாதசாரிகள் மீது வேனை கொண்டு ஏற்றிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரின் பெயர் அலெக் மினாசென் என்று தெரியவந்துள்ளது. இது தீவிரவாத தாக்குதலா என்று தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தை நேரில் பார்த்த அலி ஷாகர் கூறும்போது, அந்த நபர் வேனை சாலை ஓரமாக செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அவர்கள் மீது வேனை கொண்டு மோதினார். அவரது பாதையில் வந்த அனைவரையும் தாக்கினார்” என்று கூறினார்.

ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்

இந்தச் சம்பவத்தில் பலியானவர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.