நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்,மனைவி,இரு குழந்தைகள் என நால்வரும் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த கந்துவட்டி கொடுமை குறித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.