முக்கிய செய்திகள்

கந்துவட்டி கொடுமை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது..

கந்துவட்டி கொடுமை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்தனர். இது தொடர்பாக நெல்லையை சேர்ந்த பாலா என்பவர் முதல்வர், மாவட்ட ஆட்சியர், போலீஸ் ஆகியோரை கிண்டல் செய்து கார்ட்டூன் வரைந்திருந்தார்.இது அவதூறு பரப்புவதாக மாவட்ட கலெக்டர் புகாரின்படி சென்னையில் பாலாவை போலீசார் கைது செய்தனர்.