முக்கிய செய்திகள்

பெண்களை இழிவு படுத்தும் ஜோதிகா: போட்டாச்சு வழக்கு!

நாச்சியார் படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனம் பேசியதாக நடிகை ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் பாலாவின் அடுத்த படமான நாச்சியார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய இந்த டீசரில் நடிகை ஜோதிகா பேசும் வசனம் ஒன்று அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த நிலயில் நடிகை ஜோதிகா மீதும், இயக்குனர் பாலா மீதும் மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை, கார் ஓட்டுநர் ராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சாமானியர்கள் பொது இடத்தில் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தும் பட்சத்தில் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரபல நடிகை ஒருவர் திரைப்படத்தில் ஆபாசமாக வசனம் பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொது இடத்தில் தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வார்த்தைகளை பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஜோதிகா மீதும் இயக்குனர் பாலா மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Case against Jyothika