சாதி ஒழிந்தால் தான் சமூக நீதி ஏற்படும் : மக்களவையில் தம்பிதுரை பேச்சு..

சமூக நீதியை காப்பதற்கே இடஒதுக்கீடு என்று மக்களவையில் தம்பிதுரை பேசினார்.

10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய தமிபிதுரை, வர்ணாசிரம முறையால் பல சாதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

பல நூற்றாண்டுகளாக சூத்திரர்களான நாங்கள் பாதிக்கப்பட்டு விட்டோம். சூத்திரர்களாக வகைப்படுத்தப்பட்டதால் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டோம் என்று கூறினார்.

தற்போது கூட சூத்திரர்களை ஏற்றுக் கொள்ளாத பிரிவினர்கள் உள்ளனர்.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்ற பல சட்டங்கள் உள்ளன. மனிதர்கள் முதலில் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

சமூக நீதிக்காகதான் நீதிக்கட்சியே தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவே நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது.

சுதந்திரம் அடைவதற்கு முன் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்று கூறியவர் பெரியார் என்று

சாதி ஒழிய வேண்டும்…

சாதி ஒழிந்தால் தான் சமூக நீதி ஏற்படும் என்று மக்களவையில் தம்பிதுரை பேசினார். இடஒதுக்கீடு உச்ச வரம்பை 70 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 90% மக்கள் ஒதுக்கப்பட்டவர்களே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 69% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. வாக்குறுதிகள் வெறும் பேச்சு தானா என்று கூறினார்.

ஆண்டு வருடம் ரூ. 8 லட்சம் என்றால் அவர் வசதிப்படைத்தவர்தானே என்று தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.