8 வழிச்சாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக திருவண்ணாமலையில் 3 பேர் கைது..

June 30, 2018 admin 0

திருவண்ணாமலையில் 8 வழி பசுமைசாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை போராட்டம் என வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அனுப்பிய விஜயகுமார், பவுன்குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

தமிழகத்தில் சமூக ஊடகங்கள் மூலமாக சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்..

June 30, 2018 admin 0

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மீனவர்களை திசைதிருப்பிய புகார் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பு நவடிக்கை தேவை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மக்கள் போராட்டத்தை திசை திருப்பும் மக்கள் அதிகார அமைப்பு போன்றோர் மீது உரிய நடவடிக்கை […]

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா

June 30, 2018 admin 0

ராமநாதபுரத்தை சேர்ந்த சத்யாஸ்ரீ சர்மிளா என்ற திருநங்கை தமிழகத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞராக தேர்வாகி உள்ளார். ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்யஸ்ரீ என்ற திருநங்கை ஒருவர் தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சலில் பதிவு செய்யப்பட்டு […]

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் : கிரண்பேடி

June 30, 2018 admin 0

புதுச்சேரி சோம்பேட் பகுதியில் துணைநிலை கவர்னர் கிரண்பேடி, இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். புதுச்சேரியில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் சீரமைக்கப்படும் என்றார். […]

காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுவீச்சில் எதிர்க்க கர்நாடகா முடிவு

June 30, 2018 admin 0

  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவதெனவும் கர்நாடாகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் […]

கேரளாவில் பிஷப் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்…

June 30, 2018 admin 0

கேரளாவில், சிரியோ மலபார் கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. […]

தொடர்ந்து 3 மாதம் ரேசன் பொருள் வாங்காமல் இருந்தால் குடும்ப அட்டை ரத்து..

June 30, 2018 admin 0

மூன்று மாதம் ரேஷன் பொருள்கள் வாங்காமல் தவிர்த்தால், பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.`குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருள்களை முறையாக வாங்குகிறார்களா என்பதை மாநில அரசுகள் […]

“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்..

June 29, 2018 admin 0

“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்.. அதர்வா நீண்ட வருடமாக ஒரு நல்ல ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார். அதனால், இந்த முறை தன் சொந்த தயாரிப்பிலேயே அதுவும் தன் முதல் பட இயக்குனருடன் […]

கரும்பு விலை விரைவில் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

June 29, 2018 admin 0

நடப்பு நிதியாண்டிற்கான, கரும்பு விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது அலுவலக வளாகத்தில், உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வந்திருந்த 150-க்கும் […]