முக்கிய செய்திகள்

காவிரி வழக்கில் நாளை தீர்ப்பு ?..


காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான அமிதவராய் பிப்.23-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். ஆதலால் நீதிபதியின் ஓய்வுக்கு முன் தீர்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.