முக்கிய செய்திகள்

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது..


காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மத்திய நீர்வளத்துறை ஆணையர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் செந்தில் குமார் பங்கேற்றுள்ளார்.

ஆணையக் கூட்டத்தின் முடிவை செயல்படுத்துவது பற்றி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. நீர் திறப்பு, நீர் இருப்பு, நீர் வெளியேற்றத்தை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் ஜூலை 5ம் தேதி நடைபெறும் என்று காவிரி ஆணையத் தலைவர் மசூத் உசேன் பேட்டி அளித்திருந்தார்.

இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் கடந்த ஜுலை 2ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.