முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: ஸ்டாலின்

வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் அறிவி்த்துள்ளார். திமுக, மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். அனைத்துக்கட்சி சார்பில் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்
* காவிரி வாரியம் அமைக்கக்கோரி உயிரிழந்த வைகோவின் உறவினருக்கு இரங்கள் தீர்மானம்
* அனைத்துக்கட்சிகள் சார்பில் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க கூட்டத்தில் தீர்மானம்
* பிரதமர் நேரம் ஒதுக்கினால் டெல்லி சென்று காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்திட்டம்