காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 3 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
2 இடங்களில் வேதாந்தாவுக்கும்,ஒரு இடத்தில் ஓஎன்ஜிசிக்கும் அனுமதி வழங்கியது கண்டிக்கத்தக்கது.
இதன் மூலம் தமிழக விவசாயம்,முன்னேற்றம் பற்றி மத்திய அரசு துளியும் கவலைப்படவில்லை.
தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மத்திய அரசுக்கு இதனை நினைவுபடுத்தி தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.