முக்கிய செய்திகள்

காவேரி மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் வருகை..


சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருனாநிதி உடல்நலக் குறைவால் நள்ளிரவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இன்று காலை மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை புரிந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

காவேரி மருத்துவமனை மருத்துவர்களிடம் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் விசாரித்தார்.