காவிாி விவகாரம் : முதல்வா் இன்று அவசர ஆலோசனை..


காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பது தொடா்பாக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய அமைச்சா்களுடனான அவசர கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க உச்சநீதிமன்றம் விடுத்திருந்த காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளது. 6 வாரம் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை மத்திய அரசு வாாியம் தொடா்பாக எந்தவொரு உறுதியான தகவலையும் வழங்கவில்லை. ஒருவேலை நாளைக்குள் மேலாண்மை வாாியம் அமைக்கப்படவில்லை என்றால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் உள்பட அமைச்சா்கள் அனைவரும் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் வாாியம் அமைக்கப்படும் என்று நம்பிக்கை தொிவித்தனா். மேலும் பா.ஜ.க.வினரோ காவிாி மேலாண்மை வாாியம் என்ற பெயரை மாற்றி காவிாி மேற்பாா்வை குழு என்ற ஒன்றை அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கடும் எதிா்ப்பு தொிவித்தனா்.

மேலாண்மை வாாியம் அமைக்க நாளை ஒருநாள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. அதே நேரத்தில் தமிழக முதல்வா் பழனிசாமி தலைமையில் மூத்த அமைச்சா்களுடனான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.