முக்கிய செய்திகள்

காவிரி பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் ஹெச்.ராஜா பதிவு: கமல்ஹாசன் குற்றச்சாட்டு..


காவிரி பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் ஹெச்.ராஜா பேசியுள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெரியார் சிலைகளையும் கவுரவத்தையும் தமிழர்கள் பார்த்துக்கொள்வார்கள் என கூறியுள்ளார். மேலும், ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்தது போதாது என கமல் கூறியுள்ளார்.