முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை


மே மாதத்துக்குள் காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசுக்கும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை மே 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.