முக்கிய செய்திகள்

காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர்: கமல்..


திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்,`காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசிற்கு நாங்கள் சொல்லி கொள்வது இதுதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் அமைதியான முறையில் தமிழகம் உங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கும்’ என்று பேசினார்.

காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர் என்று திருச்சி பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேச்சினார். மத்திய அரசு செய்வது தவறு, இதற்கு மேல் பேசுவது அவமரியாதை, அதை நாங்கள் செய்ய மாட்டோம் என்று கமல் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும், எத்தனை கலவரம் தூண்டினாலும் திசை திரும்ப மாட்டோம் என்றும் ஸ்கீம் என்பதை என்னவென்று கேட்டு காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது என்றும் கமல் கூறியுள்ளார்.