காவிரி விவகாரம் : தமிழகம் முழுவதும் பொங்கியெழுந்த போராட்டம்..


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை விலியுறுத்தி கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம்,மறியல் போராட்டங்களை தமிழக எதிர்கட்சிகள்,மற்றும் இயக்கங்கள் நடத்தி வந்தனள.இன்று திமுக தலைமையில் எதிர்கட்சிகள் இன்று முழுயடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தினர்.

இன்று காலை முதல் தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் ஓரளவே இயங்குகின்றன. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக காங்,விசிக,மதிமுக தொண்டர்கள் சென்னை மெரினாவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் வலுக்கட்டயமாக கைது செய்தனர்.

இது போல் தமிழகமெங்கும் குறிப்பாக சேலம்,மதுரை உட்பட பல நகரங்களில் திமுக உட்பட எதிர்கட்சிகள் ரயில் மறியல் போராட்டம்,சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்து போய்வுள்ளது. போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.