முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம்: நாளை(மார்ச் 15) சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்..


சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 15) தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின், காவிரி விவகாரம் தொடர்பாக சிறப்புக்கூட்டம் நடைபெற உள்ளது. மதியம் நடைபெறும் இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கூட்டமானது மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.