முக்கிய செய்திகள்

தமிழகத்தை வஞ்சித்த அரசுகள் நிச்சயம் வீழ்த்தப்படும்: டிடிவி தினகரன்..

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ள மத்திய அரசு, தமிழக மக்கள் விரோத போக்கைக் கடைபிடித்து வருகிறது.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயலிழந்த தன்மையை காட்டுகிறது. இது மென்மையான போக்கை கடைபிடித்து வருவதால், மத்திய அரசு ஆட்டம் போடுகிறது.
முதலமைச்சர் பழனிச்சாமி, காவிரி விவகாரத்தில் மௌனசாமி ஆவார். எனவே மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழக மக்களை வஞ்சித்த குற்றத்திற்காக நிச்சயம் அனுபவிப்பார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.