காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், தமிழகம் முழுவதும் கொதிப்பலையில் உள்ளனர் பொதுமக்கள். இதனால் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் தேமுதிக சார்பாகவும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இதில் தேமுதிக கட்சியினர் பங்கேற்று மத்திய அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.