முக்கிய செய்திகள்

காவிரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் 3 கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு முடிவு…


காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள இன்றைய விசாரணையின் போது 3 கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு உருவாக்க உள்ள அமைப்பிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும், இதனை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் மற்றும் அமைப்பின் தலைமையிடத்தை பெங்களூருவில் இருந்து மாற்ற வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை தமிழக அரசு சார்பி்ல் முன்வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.