காவிரி வழக்கு தீர்ப்பு தமிழகத்திற்கு ஏமாற்றம் தான் என நடிகர் கமல் கருத்துதெரிவித்துள்ளார். தற்போது அளிக்கப்பட்ட தீர்ப்பை பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ளவேண்டும்.
காவிரி விவகாரத்தை இரு மாநிலங்களும் அரசியலாக்க கூடாது , தமிழகம் , கர்நாடக இடையே அமைதி நிலவவேண்டும் என்று கமல் சென்னை ஆல்வார்ப்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
காவிரி நீரை பத்திரப்படுத்துவது தமிழக அரசின் கடமை என அவர் மேலும் தெரிவித்தார்.