தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் 4 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு 30 டிஎம்சி., தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என மசூத் உசேன் உத்தரவிட்டுள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் ஜூலை 5 ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக நடைபெற்ற காவிரி ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தண்ணீரை திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த முதல் உத்தரவு தமிழகத்திற்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.
Cauvery management Authority ordered to Karnataka Immediately release 30 TMC water