காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி


காவிரிஉரிமையை பாதுகாப்பதை விட மெரினாவை பாதுகாப்பது தான் அரசுக்கு முக்கியமா என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணு அனுமதி கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: போராட்டத்தை ஒழுங்கு படுத்துவது தான் அரசின் கடமை போரட்டத்தை தடுக்க அதிகாரமில்லை கடற்கரையை பாதுகாப்பது தான் அரசுக்கு முக்கியமா பண்டிகைகளை கொண்டாடக்கூடாது எனமக்களை தடுக்க முடியுமா வைகுண்ட ஏகாதசி , கிறிஸ்துமஸ்,ரம்ஜான் போன்ற விழாக்காலங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என கூற முடியுமா இவ்வாறு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தொடர்ந்து பதில் அளித்த அரசின் மனுவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என கூறியது. இதனையடுத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தது.