முக்கிய செய்திகள்

காவிரி வரைவுத் திட்டம் : 9 பேர் கொண்ட குழு..

மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி. சிங், மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயது வரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும் இருவர் முழுநேர உறுப்பினர்களாகச் செயல்படுவர் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. பின்னர் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி. சிங், ‘காவிரி நதிநீர் பங்கீடு செய்ய 9 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். இது காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அமைப்பாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் இருப்பார்’ என்றார்.