காவிரி வரைவு திட்டத்தை வரும் 14ந்தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு..

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்தக் கோரி தமிழக அரசு தொடர்நத வழக்கின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. கடந்த 3-ம் தேதி விசாரணையின் போது கர்நாடகம் தமிழகத்திற்கு 4 டிம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. ஆனால் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் விட முடியாது என கர்நாடகம் மனு அளித்துள்ளது.

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு காவிரி வரைவு திட்டம் தயாராகி விட்டது. மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு காத்திருப்பதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வரும் மே-14-ந்தேதி காவிரி வரைவு திட்டம் பற்றி சர்மப்பிக்க உத்தரவிட்டது.