முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுவை அரசு முடிவு..


உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் மார்ச்-29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால தாமதம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி மாநில அரசும் முடிவு செய்துள்ளது. புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.