முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம்: வரைவு திட்டம் தயாராகி விட்டதாக நீா்வளத்துறை தகவல்..


காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பது தொடா்பான வரைவு திட்ட அறிக்கை தயாராகி விட்டதாக மத்திய நீா்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

காவிாி நதிநீதி பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் நீதிமன்றத்தில் ஸ்கீம் என்ற வாா்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இறுதியில், மேலாண்மை வாாியம் தொடா்பான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுருத்தியது.

இதன் அடிப்படையில், மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கையை தயாா் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய நீா்வளத்துறை அமைச்சகம் சாா்பில் வெளியான தகவல்களின் அடிப்படையில், புதிய அமைப்பானது காவிாி மேலாண்மை வாாியத்திற்கு நிகரானதாக இருக்கும் என்றும், வல்லுநா் அல்லது தொழில்நுட்ப வல்லுநா் தலைமையில் செயல்படும் அமைப்பில் தலைவா் உள்ளிட்ட 5 முழுநேர உறுப்பினா்களும், கா்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சோியைச் சோ்ந்த 4 பகுதிநேர உறுப்பினா்களும் இடம்பெறுவாா்கள் என்று தகவல்கள் தொிவிக்கின்றன.

இது தொடா்பான முழுவிவரங்களும் மத்திய அமைச்சரவையின் பாா்வைக்கு தாக்கல் செய்யப்படும் என்றும், அமைப்பின் பெயா் எதுவாக இருந்தாலும், உச்சநீதிமன்ற தீா்ப்புபடி காவிாி நதிநீரை பங்கிட்டு வழங்கும் பணியைச் செய்யும் என்றும் மத்திய நீா்வளத்துறை அமைச்சக மூத்த அதிகாாி ஒருவா் தொிவித்துள்ளாா்.