முக்கிய செய்திகள்

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது : சுப்பிரமணியன் சுவாமி..


தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எம்பி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

தமிழக அரசுக்கு தண்ணீர் வேண்டுமானால் மாற்று வழிகள் குறித்து யோசனை வழங்கத் தயார். ஆனால், காவிரி தண்ணீர்தான் வேண்டுமென்றால், அது கிடைக்கப்போவதில்லை. ஐஐடி-யில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது தவறில்லை. தமிழக அரசின் நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டதுதான் ஐஐடி.