பிரதமரிடம் பாதுகாப்பு அதிகாரியாக முன்பு பணிபுரிந்தவரான சிறப்பு இயக்குனர் அஸ்தானா,
தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தற்போது முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்த பின் பேட்டி அளித்த அவர்,
சிபிஐ இயக்குனரின் பதவிக்காலம் குறைந்தது 2 ஆண்டு காலம் நீடிக்க வேண்டும் என்றும் பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோரால் நிரப்பப்படக் கூடிய அந்த கண்ணியமிக்க பதவிக்கு களங்கம் ஏற்படும் வகையில், சொந்த நலனுக்காக அந்த அமைப்பே பாழ்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
பிரதமரிடம் பாதுகாப்பு அதிகாரியாக முன்பு பணிபுரிந்தவரான சிறப்பு இயக்குனர் அஸ்தானா, தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.