முக்கிய செய்திகள்

தொலைபேசி இணைப்பக முறைகேடு: மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு

சட்ட விரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட  7பேரையும் விடுவிக்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

 

மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் தொலைக்காட்சிக்கு பிஎஸ்என்எல்-ன் அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதிமாறன், கலாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொதுமேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளரான கவுதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

 

இந்த வழக்கு விசாரணை சென்னை 14-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு டெல்லி சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

 

தங்களை விடுவிக்கக்கோரி மாறன் சகோதரர்கள் மற்றும் கவுதமன், ரவி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் நீதிபதி நடராஜன் முன்பு விசாரணைக்கு வந்த போது, இதற்கு பதிலளிக்க சிபிஐ தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு (நவம்பர் 10, 2017) இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கில் குற்றம் சாட்டாப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

CBI opposed to relieve Maran brothers from illegal telephone exchange case