முக்கிய செய்திகள்

சி.பி.எஸ்.இ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை : அதிர்ச்சி தகவல்..

சி.பி.எஸ்.இ தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி,ஹரியானாவில் கடத்தப்பட்டு, கூட்டு  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் அந்த மாணவி, ரெவாரியில் இருக்கும் ஒரு பயிற்சி மையத்துக்கு சென்ற போது

3 மர்ம நபர்கள் கடத்தி ,கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, காவல் துறையினர் அவர்களின் புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த பெண்ணின் தாயார் பிரதமர் மோடியின், பெண் குழந்தைகளுக்கு கல்வி தாருங்கள், பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்ற வாசகத்தை குறிப்பிட்டு, நீதி கேட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.