மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
• சரக்கு மற்றும் சேவை வரி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. இது தேசத்தை ஒன்றுபடுத்தியுள்ளது.
• வர்த்தகர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இல்லை.
• பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி அமலாக்கம்.
• 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்துள்ளனர்.
• புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் சேர்ப்பு. இதுவரை இல்லாத மைல்கல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
• உலகிலேயே 5 வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
• முன்பு எப்போதும் இல்லாத வகையில் நேரடி அந்நிய முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
• அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது இந்த பட்ஜெட். முயற்சி, உத்வேகம், உற்சாகம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இது உள்ளது.
• வேளாண் துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது.
• வேளாண் துறையைப் போட்டிகள் நிறைந்ததாக மாற்றவும், வேளாண் சந்தையை தாராளமயமாக்கவும் 15 அம்சங்கள் கொண்ட செயல் திட்டம்
• மாநிலங்கள், இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ஊக்கம் அளிக்கப்படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்புசெட்டுகள்
• பாசனத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
• உரங்கள் பயன்பாட்டில் சமநிலையை நிலைநிறுத்த நடவடிக்கை.
• நமது மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும், நமது வர்த்தகங்கள் ஆரோக்கியமானதாக அமையவும், அனைத்து சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் எஸ்சி-எஸ்டி பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இந்த பட்ஜெட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
• சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு காரணமாக போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையின் திறன் மேம்பட்டிருப்பதுடன், அதிகாரிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, குறு,சிறு,நடுத்தர தொழில்துறை நுகர்வோர்களும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.
• வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசார் குறியீடும், வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
• சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக கிராமங்களில் சேமிப்புக் கிடங்கு.
• வேளாண் உற்பத்திப் பொருட்களை ரயில் மற்றும் விமானம் மூலம் பல்வேறு சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல சிறப்பு வசதிகள்.
• ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் அறிமுகம்.
• ஒரு மாவட்டத்திற்கு ஒரு வேளாண் உற்பத்திப்பொருள் என்ற புதிய நோக்கிலான திட்டம்.
• முதலீடற்ற இயற்கை வேளாண் திட்டம்
• வேளாண் கடனுக்கான நிதி ஒதுக்கீடு 15 லட்சம் கோடி
• பால் பதப்படுத்துதல் அளவை இரட்டிப்பாக்கவும், மீன் உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கவும் முடிவு
• வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. ஊரக வளர்ச்சிக்கு 1.23 லட்சம் கோடி நிதிஒதுக்கீடு
FEB 1, 12:15 PM IST
பாரத் நெட் திட்டம்
ஒவ்வொரு கிராமத்திலும் இணைய வசதி மூலம் தகவல் பரிமாற்றத்துக்கான பிரத்யேக திட்டம் செயல்படுத்தப்படும். தபால் நிலையங்கள், காவல்நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் இணைக்கப்படும்.
FEB 1, 12:07 PM IST
மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
• சரக்கு மற்றும் சேவை வரி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. இது தேசத்தை ஒன்றுபடுத்தியுள்ளது.
• வர்த்தகர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இல்லை.
• பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி அமலாக்கம்.
• 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்துள்ளனர்.
• புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் சேர்ப்பு. இதுவரை இல்லாத மைல்கல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
• உலகிலேயே 5 வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
• முன்பு எப்போதும் இல்லாத வகையில் நேரடி அந்நிய முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
• அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது இந்த பட்ஜெட். முயற்சி, உத்வேகம், உற்சாகம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இது உள்ளது.
• வேளாண் துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது.
• வேளாண் துறையைப் போட்டிகள் நிறைந்ததாக மாற்றவும், வேளாண் சந்தையை தாராளமயமாக்கவும் 15 அம்சங்கள் கொண்ட செயல் திட்டம்
• மாநிலங்கள், இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ஊக்கம் அளிக்கப்படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்புசெட்டுகள்
• பாசனத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
• உரங்கள் பயன்பாட்டில் சமநிலையை நிலைநிறுத்த நடவடிக்கை.
• நமது மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும், நமது வர்த்தகங்கள் ஆரோக்கியமானதாக அமையவும், அனைத்து சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் எஸ்சி-எஸ்டி பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இந்த பட்ஜெட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
• சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு காரணமாக போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையின் திறன் மேம்பட்டிருப்பதுடன், அதிகாரிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, குறு,சிறு,நடுத்தர தொழில்துறை நுகர்வோர்களும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.
• வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசார் குறியீடும், வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
• சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக கிராமங்களில் சேமிப்புக் கிடங்கு.
• வேளாண் உற்பத்திப் பொருட்களை ரயில் மற்றும் விமானம் மூலம் பல்வேறு சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல சிறப்பு வசதிகள்.
• ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் அறிமுகம்.
• ஒரு மாவட்டத்திற்கு ஒரு வேளாண் உற்பத்திப்பொருள் என்ற புதிய நோக்கிலான திட்டம்.
• முதலீடற்ற இயற்கை வேளாண் திட்டம்
• வேளாண் கடனுக்கான நிதி ஒதுக்கீடு 15 லட்சம் கோடி
• பால் பதப்படுத்துதல் அளவை இரட்டிப்பாக்கவும், மீன் உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கவும் முடிவு
• வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. ஊரக வளர்ச்சிக்கு 1.23 லட்சம் கோடி நிதிஒதுக்கீடுநாடுமுழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவைப்பணிகளுக்கு பற்றாக்குறை இருப்பதால் மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் மருத்துவக் கல்லூரிகள்
அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட வுள்ளன
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு
* புதிய தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்.
* அதுபோலவேசொத்துக்கள் பதிவு செய்வது, வரி செலுத்துவது, ஒப்பந்தம் போன்றவைகளின் நடைமுறைகளையும் எளிதாக்க வேண்டும்.
* வெங்காயம் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை பயனளிக்கவில்லை.
* உள்கட்டமைப்பு துறையில், தனியார் உதவியுடன் அதிக அளவிலான முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.
* வரும் நிதியாண்டில் வரி வருவாய கணக்கிடப்பட்ட தொகையை விட குறைவாகவே இருக்கும்.
* அதிகரித்தால் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பதற்கு வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் அறிமுகம்
27,000 கிலோமீட்டர் தூர ரெயில் பாதை மின்மயமாக்கப்படும்
ரயில்வே-க்கு சொந்தமான காலி இடங்களில் சோலார் மின் நிலையங்கள் அமைக்கப்படும்
இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக்குவதே பிரதமர் மோடியின் கனவு