மத்திய பட்ஜெட் தேசத்தை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் உள்ளது: பிரதமர் மோடி…

மத்திய பட்ஜெட் தேசத்தை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் உள்ளது என்றும் தொலைநோக்கு, செயல்பாடு கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சனிக்கிழமை தனது 2வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் 2020-21 ஆம் ஆண்டுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு, நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு உதவியாக உதான் திட்டம்.

2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் என ஒட்டுமொத்த அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களை பட்டியலிட்டு பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

தேசத்தை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை அதிகரிக்கும் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கு வகையில் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

தொழில் முனைவோருக்கு மாவட்டந்தோறும் தனி வளாகங்கள் அமைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டம். வரிகுறைப்பின் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள்.

வெளிநாட்டினர் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வரிச்சலுகை அறிவிப்பு என அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிப்பதால் வேலை வாய்ப்பு பெரும்.

இந்த பட்ஜெட் வருமானத்தையும் முதலீட்டையும் அதிகரிக்கும் என்று நம்புவதாகவும், இது தேவை மற்றும் நுகர்வை அதிகரிக்கும்.

இது நிதி அமைப்பு மற்றும் கடன் வழங்குவதில் புதிய உந்துதலை கொண்டுவரும். நாட்டின் தற்போதைய தேவைகளையும் இந்த தசாப்தத்தின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ள மோடி,

தேசத்தை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் தொலைநோக்கு, செயல்பாடு கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் .