முக்கிய செய்திகள்

மத்திய அமைச்சரவை திடீர் மாற்றம்; பியூஸ் கோயலுக்கு நிதித்துறை..


மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 12ஆம் தேதி, கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு கூடுதலாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்மிருதி இராணி தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஓய்வு எடுத்து வருகிறார். அதன் காரணமாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கூடுதலாக நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.எஸ்.அலுவாலியா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக அல்போன்ஸ் கண்ணன்தானம் பதவி வகித்து வந்தார்.