முக்கிய செய்திகள்

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு : லாரி ஸ்டிரைக் வாபஸ்..


கடந்த 8 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சாலை போக்குவரத்துதுறை செயலாளர் மலிக் பேச்சு நடத்தினார். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 5 நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடி எட்டப்பட்டதையடுத்து கடந்த 20-ம் தேதி முதல் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.