
காரைக்குடி நகராட்சி எதிரில் காரைக்குடி டூர்ஸ் & டிராவல்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் , அன்னை தெரசா சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அனைத்திந்திய வாகன ஓட்டுநர் பேரவை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில்
* மோட்டர் தொழிலை பாதிக்கும் பெட்ரோல்,டீசல்,எரிவாயு விலையை நாள் தோறும் உயர்த்தி பொதுமக்கள் மிது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
*டோல்கேட்டில் கட்டாயம் என்பதை திரும்ப பெற வேண்டும்
*15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை உபயோகப்படுத்துவதற்கான தடை விதிக்கப்பட்ட சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

*இ-சலான் மூலமாக தேவையற்ற அபதாரம் விதிப்பதை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுலாவாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்