முக்கிய செய்திகள்

காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் : நிதின் கட்காரி..

காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் விரைவில் அமல்படுத்தப்படும் என நிதின் கட்காரி கூறினார்.

அமராவதியில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய நிதின் கட்காரி, கோதாவரியில் ஆண்டுதோறும் 1100 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம் இடையே சர்ச்சை நீடித்து வருகிறது. எனவே கோதாவரி தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.

இத்திட்டத்திற்கு கால்வாய்களை உருவாக்காமல், சிறப்பு தொழில்நுட்பத்துடன் மெல்லிய தடிமன் கொண்ட இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

இதனால் பணச்செலவு குறையும்.