முக்கிய செய்திகள்

காமன்வெல்த் : இந்தியாவிற்கு மல்யுத்த போட்டியில் தங்கம்..


காமன்வெல்த் போட்டியில் ஆடவர் 125 கிலோ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் 125 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில், நைஜீரியா வீரர் சினிவீ போல்டிக் காயம் காரணமாக விலகியதை அடுத்து அவரை எதிர்கொள்ள இருந்த இந்திய வீரர் சுமித்திற்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. மற்றும் மகளிர் 62 கிலோ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்றார். இதன் மூலம் மொத்தம் 22 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலம் என 50 பதக்கத்துடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.