முக்கிய செய்திகள்

தொடரும் மரணம் : சண்டிகரில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர் மர்ம மரணம்..


இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழ் மாணவர் கிஷ்ண பிசராத் ,விடுதியின் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழ் மாணவர் கிஷ்ண பிரசாத் . இவர் சண்டிகரில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER) மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.டி ஜெனரல் மெடிசின் துறையில் படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை , விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவருடன் படிக்கும் தமிழ் மாணவர் பேசும்போது கூறியதாவது ‘ அவர் இங்கே வந்துசேரும் போது என்னுடன் அறிமுகம் ஆனார். மேலும் அவருக்கு இந்தி சரியாக தெரியவில்லை என்றும் மீண்டும் ஊரிக்கு செல்லபோவதாக என்னிடம் தெரிவித்தார்.

நாங்கள் அவரை சமாதனப்படுத்தி இங்கே இருக்குமாறு தெரிவித்தோம் . அதன் பிறகு அவர் கவுன்சிலிங் மூலம் வேறு பிரிவுக்கு மாறிவிட்டதால்,அவரை சந்திக்க முடியவில்லை. மேலும் அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை இல்லை .என்று கூறினார்.கிருஷ்ண பிரசாத் மரணம் நடப்பதற்கு முன்பு அவரை 4 நாட்கள் காணவில்லை . இதனை அடுத்து அவரின் துறை பேராசியர் அவரது விடுதியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

மேலும் இங்கே படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு இந்தி தெரியாததால் அதிகம் மன அழுத்தம் ஏற்படுவதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை கல்லூரி நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை .