செக்க சிவந்த வானம்: மிரட்டும் முன்னோட்டம்

Chekka Chivantha Vanam

.காற்று வெளியிடை படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி , சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா ஆகிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து செக்கச் சிவந்த வானம் என்ற படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு வழக்கம்போல ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் மாதம் 28 -ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.