செங்கல்பட்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு..

தமிழ்நாடு செங்கல்பட்டில் இன்று (8.12.2023 காலை 7.39 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக N.C.S(National Center For Seismology)தெரிவித்துள்ளது.

Earthquake of Magnitude:3.2, Occurred on 08-12-2023, 07:39:22 IST, Lat: 12.50 & Long: 79.85, Depth: 10 Km ,Location: Chengalpattu, Tamil Nadu, India for more information Download the BhooKamp App https://t.co/W5OwSbf8cL@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 @KirenRijiju pic.twitter.com/irkQDHzPYD

— National Center for Seismology (@NCS_Earthquake) December 8, 2023
Earthquake of magnitude 3.2 hits Tamil Nadu’s Chengalpattu

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2 முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. சரியாக காலை 7.35 மணி மற்றும் 7.42 மணி அளவில் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்தனர். குறிப்பாக வாணியம்பாடி நியூ டவுன், யாப்பா நகர், பொரபசர் நகர், ஜனதாபுரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. அதேபோல் ஆம்பூர் அடுத்த மாதனூர், பாலூர் ஊராட்சி, கருப்பூர் ஊராட்சி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வால் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், ராஜாகுப்பம், பல்லக்குப்பம், அணைக்கட்டு அடுத்த குருவராஜபாளையம், ஆசனாம்பட்டு, சின்னப்பள்ளிகுப்பம், தென்புதூர், அரிமலை உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ் நேரில் சாட்சியம் அளிக்க விலக்கு கோரும் மனு : உயர்நீதிமன்றம் கேள்வி..

தை பூசத்தை முன்னிட்டு காரைக்குடியிலிருந்து பழனிக்கு சிறப்பு இரயில் இயக்க கோரிக்கை : மதுரை இரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு..

Recent Posts