சென்னை விமான நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து கூறப்படுவதாவது: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மர்மநபர் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்திற்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெடி குண்டு நிபுணர்கள் விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
