முக்கிய செய்திகள்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்..


சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி ரவிச்சந்திரன் என்பவர் போராட்டம் நடத்தி வருகிறார்.தமிழகத்தில் ஊழல் மிகுந்து விட்டதாகவும், முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என கோரி டவரில் ஏறி போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார். இதனால் அண்ணா மேம்பாலம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்தும் இளைஞருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.