சென்னை-பெங்களூர் உள்ளிட்ட பத்து நகரங்களுக்கு புல்லட் ரயில்..

சென்னை-மைசூர், சென்னை-பெங்களூர் உட்பட பத்து புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, வாரணாசி, போபால், அமிர்தசரஸ், அகமதாபாத் ஆகிய 6 வழித்தடங்களிலும்

நாக்புர்-மும்பை மற்றும் பாட்னா-கொல்கத்தா வழித்தடத்திலும் புல்லட் ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2025 அல்லது 2026ம் ஆண்டில் திட்டம் நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயிலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

மேலும் சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தவும் சரக்குப் போக்குவரத்தை இரட்டிப்பாக்கவும் ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் திட்டங்களை வகுத்து வருகிறது.