சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு : -பொதுமக்கள்அதிர்ச்சி …

சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் வழக்‍கத்தை விட காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்றின் தர அளவு பன்மடங்கு உயர்ந்து 625 என்ற அளவை அடைந்ததால், மிக மிக மோசமான நிலையை டெல்லி எட்டியுள்ளது.

இத்தகைய பாதிப்புக்குள் சென்னை நகரம் தற்போது சிக்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக காற்று மாசு அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், சென்னையில் காற்று தரக்குறியீடு சுவாசிக்கத் தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாகதாகவும், 50 வரை மட்டுமே இருக்க வேண்டிய காற்றின் தரக்குறியீடு 357 ஆக அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு பிஎம் 10, பிஎம் 2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம் 2.5ன் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது.

சென்னையில் இதன் அளவு 264 மைக்ரோ கிராமாக இருந்தது. குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூர், அண்ணா நகரில் சராசரி காற்றுமாசு 341 தரக்குறியீடாக இருந்தது.

சென்னையில் வறண்ட வானிலை நிலவி வருவதால் நாளை வரை காற்றுமாசு அதிகரித்தே காணப்படும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

காற்று மாசுபாட்டால் பொதுமக்கள் அதிர்சியடைந்துள்ளனர்