
நிவர் புயல் தமிழகத்தை நோக்கி இன்று இரவு கரையைக்கடக்கும் நிலையில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது.
சென்னையில் சென்னை யில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை பெரம்பூர் பகுதியை பார்வையிட்ட திமுக தலைவர் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
கொளத்துார் பகுதிகளிலும் வெள்ள பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட வருகிறார்.