முக்கிய செய்திகள்

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்- பிரணாப் முகர்ஜி சந்திப்பு..


சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்துள்ளார்.

மறைந்த கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்க கோபாலபுரம் வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரணாப் முகர்ஜியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

சிறந்த தலைவரான கலைஞரை இழந்து விட்டோம் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கலைஞர் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாததால் தற்போது வந்து அஞ்சலி செலுத்தினேன், கலைஞர் தமக்கு 48 ஆண்டுகால நண்பர் என்றும் கூறியுள்ளார்.