சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்ததையடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கும் தஹில்ரமணி ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும்,
அதனை மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
அவருடைய பதவிக்காலம் 2020 அக்டோபர் 2 வரை உள்ளது. இந்நிலையில் முன்கூட்டியே நீதித்துறை பணிகளில் இருந்து தஹில்ரமணி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.